உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மூதாட்டி சாவு
- கோவிலுக்கு சென்ற மூதாட்டி மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
போடி மணியம்பட்டி நடுத்ெதருவை சேர்ந்த கருப்பசாமி மனைவி கனகாம்பரம் (வயது80). இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மகன் பாண்டியன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சின்னமனூர் அடுத்த மார்க்கையன்கோட்ைட முல்லைப்பெரியாற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் அவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.