தமிழ்நாடு
கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர்.
- அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர். தொழில் அதிபரான இவர் சென்னை மண்ணடி பகுதியில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதற்காக 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரு காரில் இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் வந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேரும் அப்துல் காதர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். எனவே அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.