கல்வி என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா ?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.704.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
பிறகு, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை சுட்டிக் காட்டினார்.
மேலும், அவர் கூறியதாவது:-
சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டு பணி நடைபெறுகிறது. சிதம்பரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ரூ.130 கோடி செலவில் வெலிங்டன் ஏரி கரை மேம்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் புனரமைக்கப்படும். ரூ.50 கோடி மதிப்பீட்டில் மஞ்சக்குப்பம் மைதானம் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
பன்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடி செலவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். புவனகிரி, சிதம்பரம் மக்களுக்கு பயன்தரும் வகையில் 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.
திருவந்திபுரம் கோவில் பக்தர்களுக்காக ரூ.7 கோடி மதிப்பில் சாலை மேம்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடியில் ரூ.6.50 கோடி செலவில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும்.
கடலூரில் தென் பெண்ணை ஆற்றில் ரூ.57 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கெடிலம் ஆற்றில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீராணம் ஏரி ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மகளிர் உரிமைத் தொகையை அண்ணன் தரும் சீர் என பெண்கள் கூறுகின்றனர். முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
மாநிலங்கள் வளர்ந்தால் அதன் மூலம் நாடு வளரும், ஆனால் மத்திய பாஜக அரசு தமிழக வளர்ச்சியை தடுக்கிறது.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான நிதி தர மறுப்பதுடன் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்கிறது.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதை மத்திய அரசு தடுக்கிறது. சமுகநீதியை சிதைப்பதற்கு தான் தேசியக்கல்வி கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது.
முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் எத்தனையோ தடைகளையும் சிக்கல்களையும் தாண்டி தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.