தமிழ்நாடு

விவசாயிகள் வங்கிக் கணக்கில் நாளை மறுதினம் ரூ.2 ஆயிரம் வரவு

Published On 2025-02-22 10:46 IST   |   Update On 2025-02-22 10:46:00 IST
  • உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.
  • உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை:

மத்திய அரசின் 'பிரதமர் மோடியின் கிஷான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News