ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறா ? கமலுக்கு தவெக பதிலடி
- தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
- தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் அவர், "ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசியவர், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்.
ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும்.
எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என்றார்.