தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் ரெயில் சேவை ரத்து
- சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் ரத்து.
- சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் நாளை காலை 9.50- மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கணிசமான அளவில் சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.