தமிழ்நாடு
இந்தாண்டு நாடாளுமன்றத்தில்.. அடுத்தாண்டு சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
- எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
- மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.
எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும்.
மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.