உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
ஜெயமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
- மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.
- ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
ஜெயமங்கலம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் நடராஜ் மனைவி வேலம்மாள்(63).
இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹீட்டரில் தண்ணீர் காயவைத்த போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.