உள்ளூர் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- 31ம்தேதி முதல் இன்று வரை நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த 31ம்தேதி முதல் இன்று (5-ந் தேதி) வரை ஊழல் தடுப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி ஆகியவை நடைபெற்றது. மேலும் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் அவரது குழுவினர்கள் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஊழல் தடுப்பு தொடர்பாக வசனங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் போது இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி மற்றும் ஏட்டு, போலீசார் கலந்து கொண்டனர்.