உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு

Published On 2023-04-08 12:27 IST   |   Update On 2023-04-08 12:27:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கலையரசன், மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில செயலாளர் வீரசெங்கோலன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் வரும் 14ம்தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடி ஜனநாயகம் காப்போம் என்ற வாசகங்களுடன் விடுதலை சிறுத்தைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, 16ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடத்துவது. மே மாதம் 5ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநில வணிகர் அணி மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் திரளாக கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் வக்கீல் ஸ்டாலின், உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News