உள்ளூர் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
- தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறை மெஷின் வேலை செய்யாததால் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர் ராகவன் மிஷினை சரி செய்தவுடன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செட்டிகுளம் -செஞ்சேரி கிராம சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனி ச்சாமி, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கைகளால் எழுதி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததால் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.