உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிகள்.

பாவூர்சத்திரத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-09-29 14:10 IST   |   Update On 2022-09-29 14:10:00 IST
  • பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
  • பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவாக பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதற்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கி கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார், தமிழ்நாடு கோ கோ கழக செயலாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் நன்றியுரை ஆற்றினார். பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News