ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஜெயக்குமார் நகரத் துணைத் தலைவர் சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர் புற நூலகர்கள் வனத்துறை காவலர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேலு, வட்டச் செயலாளர் பிரேம்சந்திரன், இணைச்செயலாளர் வேம்பு, செயற்குழு உறுப்பினர் குருராஜன், வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கௌசல்யா சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.