உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
- ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை :
அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஊரக வளர்ச்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிக்கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் திருத்தம் செய்து, சேர்த்தல் நீக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று அதனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நீதிராஜ், உறுப்பினர்கள் லெட்சுமி, வனிதா, வீரதுரை, பரமசிவம், கவிதா, ஊராட்சி செயலாளர் அப்புராஜா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.