உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு

Published On 2023-04-08 14:10 IST   |   Update On 2023-04-08 14:10:00 IST
  • நோய் பரவும் அபாயம்
  • பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

ஆற்காடு:

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட தேவி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீட்டின் முன்பு தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனிடம் புதியதாக கழிவுநீர் கால்வாய் கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். அப்போது நகர மன்றம் உறுப்பினர்கள் ஆனந்தன் முனவர்பாஷா உள்பட பலன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News