உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தடை
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதி–கோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது.
- விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்
விழுப்புரம்:
இந்திய சுதந்திரதினத்தில் 75-வது ஆண்டுவிழா, அம்பேத் கார் நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகிய–வற்றை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதி–கோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது.இதனைத்தொடர்ந்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மனு அளித்து இருந்தனர். இந்த ஊர்வலத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுஉ ள்ளது. இதற்கான உத்தரவினை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதா பிறப்பித்து உள்ளார்.