உள்ளூர் செய்திகள்

ஓமலூர் தாலுகா அலுவலகத்தை மழைவெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி.

ஓமலூரில் மழை தாலுகா, வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களை சூழ்ந்த மழைநீர்

Published On 2023-11-09 13:36 IST   |   Update On 2023-11-09 13:36:00 IST
  • ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.
  • நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள், மக்கள் செல்லும் பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

குள்போல் தேங்கிய வெள்ளம்

மேலும் ஓமலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் மனுக்களை கொடுக்க வந்த மக்கள் மழை நீரிலேயே நடந்து சென்று அதிகாரிகளை சந்தித்தனர். இங்கு தண்ணீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் இல்லாததால் எப்போது மழைபெய்தாலும் தண்ணீர் தேங்கி பொதுமக்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல ஓமலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் குளம்போல தேங்கி யுள்ளது. அலுவலகத்தின் முன்பாக உள்ள பாதையில் அதிகளவில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வரும் அதிகாரிகளும், மக்களும் மழைநீரிலேயே நடந்து சென்று வருகின்றனர். எனவே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News