உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி பேசினார்.

செம்பதனிருப்பு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

Published On 2023-08-18 14:59 IST   |   Update On 2023-08-18 14:59:00 IST
  • வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைக்க வேண்டும்.
  • அனைத்து விதமான திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பத னிருப்பு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சித் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் வரவேற்றார்.

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகா பாரதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறை களை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் .

அப்போது கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சாலை விரிவாக்க பணியின் போது தமது வீடு இடமாற்றம் செய்யப்பட்டதால் கழிப்பிட வசதி இல்லை என தெரிவித்தார்.

அதேபோல் அல்லிவிளாகம் பகுதியில் விவசாய நிலங்களை காட்டு ப்பன்றிகள் சேதப்படுத்து வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், இந்த ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைத்திட வேண்டும் கழிவறை வசதி இல்லாத வர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அணுகி நிதி உதவி பெறலாம்.

தமிழக அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து விதமான திட்டங்க ளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், திமுக பிரமுகர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

முன்னதாக கிராம சபை தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து வாசித்தார்.

வேளாண்மை துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News