உள்ளூர் செய்திகள்

புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சுந்தரேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-08-21 15:08 IST   |   Update On 2023-08-21 15:08:00 IST
  • 4-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.

இந்த கோயிலில் தான் கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த பல கோயில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.

எங்கும் இல்லாத படி இங்குள்ள வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து காட்சி தரும் வடிவேல் குமரன் சந்நிதி இருந்து வருவது கூடுதல் சிறப்பாகும்.

திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடை பெற்றது.

விழாவை யொட்டி முதல் நாள் காலை யாக பூஜை பூமி பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து மூன்று கால யாகபூஜைக்கு பிறகு நேற்று நான்காவது யாக கால பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், பால கும்பாபிஷேகமும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து பிரகன்நாயகி, வடக்கு நோக்கிய வடிவேல் குமரன், குளக்கரை விநாயகர், நடராஜ பெருமான், கஜலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபி ஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் , தொழிலதிபர் சகாதேவன், ஊராட்சி தலைவர்கள் நாகராஜன், இளவரசன்,கனகராஜ் மற்றும் உள்ளூர் வெளியூர்க ளிலிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள்செய்திருந்தனர்.

Tags:    

Similar News