உள்ளூர் செய்திகள்
ஆதம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை நங்கநல்லூர் அவ்வையார் தெருவில் வசிப்பவர் பிரபாகரன்.இவருடைய மகன் ராஜ கவுதமன் (17). இவர் பழவந்தாங்கலில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் ராஜ கவுதமன் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் சாலையை கடக்கும் போது, எதிரே வந்த கார் மோதி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.