உள்ளூர் செய்திகள்
கத்தாரில் இருந்து சென்னைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த தொழிலாளி கைது
- போலிபாஸ் போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர்.
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் கத்தார் நாட்டிற்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் போலிபாஸ்போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.