உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்- அ.தி.மு.க. தி.மு.க., பா.ம.க. போட்டி

Published On 2022-06-25 15:18 IST   |   Update On 2022-06-25 16:07:00 IST
  • மதுராந்தகம் ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலை செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரேணுகா வெற்றி பெற்றார்.

மதுராந்தகம்:

ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. 27-ந் தேதி வரை மனுதாக்கல் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் பாக்கம், சிலாவட்டம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய 15-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரேணுகா வெற்றி பெற்றார்.

அவர் மரணம் அடைந்ததால் 15-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் யோகசுந்தரி மாசி, திமுக சார்பில் சுதா, பாமக சார்பில் சந்திரா கிருஷ்ணன் மற்றும் பிரதான கட்சியின் மாற்று வேட்பாளர்களும் மதுராந்தகம் ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலை செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News