உள்ளூர் செய்திகள்

காய்ச்சல் காரணமாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-04-11 10:18 IST   |   Update On 2023-04-11 10:18:00 IST
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
  • இன்புளூயன்சா மற்றும் கொரோனா பரிசோதனையும் எடுத்து பார்க்கப்பட்டது.

சென்னை:

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால் அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு எந்த வகை காய்ச்சல் உள்ளது என்பதை கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்புளூயன்சா மற்றும் கொரோனா பரிசோதனையும் எடுத்து பார்க்கப்பட்டது.

இதில் சாதாரண வகை காய்ச்சல்தான் அவருக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அமைச்சர் கயல்விழி செல்வ ராஜுக்கு சாதாரண காய்ச்சல்தான். எனவே நாளை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News