விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை உச்சிஷ்ட கணபதி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- மாநகரத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றன.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றன.
ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு தனி கோவிலாக அமைந்துள்ள நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 22-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களும், அதனை தொடர்ந்து 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் விநாயகர் தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருள செய்து தாமிரபரணி நதியில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தியாகராஜநகர் விக்னவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை யொட்டி நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
களக்காட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் களக்காடு தோப்புத்தெரு, தேரடி, மூங்கிலடி, சிதம்பராபுரம், டோனாவூர், பண்டிதன்குறிச்சி, காமராஜ்புரம், நெடுவிளை, பத்மநேரி, இடையன்குளம், கீழ உப்பூரணி, கீழதேவநல்லூர், கள்ளிகுளம், மாவடி, மாவடி புதூர், குளத்துக்குடியிருப்பு, கட்டளை, திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி களக்காடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.