உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-16 14:43 IST   |   Update On 2023-11-16 14:43:00 IST
  • 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
  • அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அசோக் குமார், சேகர், ராமலிங்கம், பழனி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வினோத்குமார், ஆதி திராவிடர் துறை மாநில துணைத்தலைவர் அன்புதாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்

Tags:    

Similar News