திருமணத்திற்கு வற்புறுத்திய காதலிக்கு கொலை மிரட்டல்
- ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
- போலீசார் விசாரணை
போளூர்:
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது இளம் பெண். அதே பகுதி சேர்ந்த வாலிபரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வாலிபர் இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனால் அப்பெண் கர்ப்பிணியானர். இதனால் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். வாலிபர் இதற்கு மறுத்தார்.
பின்னர் ஏதோ சில மாத்திரைகளை கொடுத்து பெண்ணின் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இளம் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்யக்கோரி வலியுறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் இளம் பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.