விவசாயிகள் கோவணத்துடன் நூதன போராட்டம்
- 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- 24-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகளின் 10- அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என 24-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுசெயலாளர் நேதாஜி, இயற்கை விவசாயி அலெக்ஸ், இயற்கை வாழ்வியல் வல்லுநர் வத்தலக்குண்டு சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.
வேப்பிலை மந்திரிப்பு செய்து கோரிக்கை வைத்தனர், விவசாயிகள் அரைநிர்வாணத்துடனும், கோவணத்துடனும் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.