திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்களில் அமைச்சர்கள் ஆய்வு
- 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன
- நகரத்திற்குள் செல்ல இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது
வேங்கிக்கால்:
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்கு வரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நகரத்திற்குள் செல்ல இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் செந்தில், தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.