மின்கசிவால் 2 பெண்கள் மட்டுமே காயம்
- கலெக்டர் தகவல்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா 7-ம் நாளான இன்று (நேற்று) பஞ்சமூர்த்திகள் தோராட்டம் நடைபெற்றது.
காலையில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியர் தேரோட்டமும் சிறப்பாக நிறைவடைந்தது. மாலை 5 மணிக்கு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் வைக்கப் பட்டிருந்த யு.பி.எஸ். கருவியில் ஏற்பட்ட மின்கசிவால் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர். அதைத்தொ டர்ந்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் நலமாக உள்ளனர்.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி பலர் பாதிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். தனியார் கடையில் இருந்த யு.பி.எஸ். காரணமாக மட்டுமே இந்த நிகழ்வு ஏற்பட்டது.
இதுதொடர்பான தவறான தகவல்களை பொதுமக்கள் பொருட்படுத்தவேண்டாம். அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தடங்கல் எதுவுமின்றி பக்தர்களின் வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.