ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
- புனித நீர் தெளிக்கப்பட்டது
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி அடுத்த கலித்தேரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீரேணு காம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது விழாவை முன்னிட்டு யாக குண்டங்கள் அமைத்து கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, 2 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, மேளதாளம் முழங்க புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோயிலை வலம்வந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினார்கள். பின்னர் பக்தர் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ., திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பளான், கோவில் நிர்வாகிகள் கோபால்சாமி | கணேசன், திருமூர்த்தி, ரகுராமன், ஸ்தபதிகள் பாலாஜி, குமார் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.