உள்ளூர் செய்திகள்

விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

ஆலைகளில் அரிசி தேக்கம்

Published On 2023-07-27 13:42 IST   |   Update On 2023-07-27 13:42:00 IST
  • விலை குறைய வாய்ப்பு
  • அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.

மேலும் ஆரணி மற்றும் களம்பூர் கஸ்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பொன்னி பிடிடி சோனா டீலக்ஸ் ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஆரணியிலிருந்து தினந்தோறும் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்க பட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

ஆரணியிலிருந்து 5 சதவீதம் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

தற்போது ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளது.

இதனால் நேரடிடையாக அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் பாதிக்க படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் விவசாயம் சம்பந்தபட்ட மூல பொரு ட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.

தற்போது அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளன.

அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News