உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
- பைக் திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்டார்
- நற்சான்றிதழ் வழங்கினார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், தலைமை காவலர்கள் ஐயப்பன், மணிகண்டன், முதல் நிலைக்காவலர்கள் மகேஸ்வரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மேற்கண்ட 4 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கிப்பாராட்டினார்.