மனைவி கண் முன்பே பைக் விபத்தில் வியாபாரி பலி
- மகன் பிறந்தநாளுக்கு புத்தாடை எடுத்துக்கொண்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 43) நெல் வியா பாரி. இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு துளசிராமன் (13), பிரசாந்த (11) என 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் துளசிராமனுக்கு வருகிற 30-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் புதியதாக புத்தாடை எடுப்பதற்காக ராஜாவும், ரேவதியும் நேற்று முன்தினம் இரவு வந்தவாசிக்கு சென்றனர்.
பின்னர் புது ஆடைகளை வாங்கிக் கொண்டு பைக்கில் கணவன், மனைவி வீடு திரும்பினர்.
வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை பொன்னூர் கூட் ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர். ஜப்திகாரணியில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற மணிக்கண் டன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராஜா ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜா. மணிக் கண்டன் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச் சம்ப வம் தொடர்பாக ரேவதி பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் பிறந்தநாளுக்கு துணி எடுத்து கொண் வீடு திரும்பும்போது விபத்தில் வியாபாரி இறந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.