உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா

Published On 2023-08-03 09:31 GMT   |   Update On 2023-08-03 09:31 GMT
  • சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா தலைமை தாங்கினார்.
  • கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருபரப்பள்ளியில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் கட்சியில் இணையும் விழா என முப்பெரும் விழா நடந்தது. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு, காங்., கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள், கிருஷ்ண மூர்த்தி, ராஜேந்திர வர்மா, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News