உள்ளூர் செய்திகள்

நகைக்கடை ஊழியர்களிடம் பணம் பறிக்க முயற்சி

Published On 2023-11-23 13:41 IST   |   Update On 2023-11-23 13:41:00 IST
  • 8 பேர் கைது
  • மிளகாய் பொடி தூவி துணிகரம்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் கவுசிக் என்பவருக்கு சொந்த மான நகை கடை உள்ளது. இந்த கடையில் கணக்காளராக ஜோன்றம்பள்ளியை சேர்ந்த அஜித் குமாரும் (வயது 23), தென்றல் நகரை சேர்ந்த பரத் (35) விற்பனை மேலாளராகவும் வேலை செய்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நகை கடையில் வசூலான ரூ.60 லட்சத்தை அஜித்குமாரும், பரத்தும் எடுத்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள வங்கியில் செலுத்த சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கில் அவர்களை பின்தொ டர்ந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூஞ்சோலை பகுதியில் அஜித்குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி, மர்ம கும்பல் பணத்தை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட 2 பேரும் கத்தி, கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதை கண்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களான முத்தமிழ் நகரை சேர்ந்த சுரேஷ்குமார், செலந்தம்ப ள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் (25), வேலநகரைச் சேர்ந்த ராஜேஷ், பெங்களூரைச் சேர்ந்த ரவிசங்கர் (37) மற்றும் 3 சிறுவர்கள் பணத்தை வழிபறி செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் பிரபாகரன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News