கோப்புபடம்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
- சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார்.
- சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஞானபிரகாஷ் (வயது 33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி ஞானப்பிரகாசுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வந்த போது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் ஞானபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.