- பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது
- ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா்.
உடுமலை:
உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.
ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும்.