உள்ளூர் செய்திகள்

  தேங்காய் களத்தில் உடைத்து உலர வைக்கப்பட்டுள்ள பருப்பு தார்பாயால் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

வானம் மேக மூட்டமாக இருந்ததால் காங்கயம் பகுதியில் தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு

Published On 2023-05-09 12:29 IST   |   Update On 2023-05-09 12:29:00 IST
  • திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன.
  • தேங்காய் எண்ணெய்உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய்உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.இந்தநிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாயால் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News