உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கல்வி அதிகாரிகள் ஆய்வால் கற்றல்,கற்பித்தல் பணிகள் பாதிப்பு - பள்ளி ஆசிரியர்கள் புகார்

Published On 2022-11-21 08:56 IST   |   Update On 2022-11-21 08:56:00 IST
  • மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
  • வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

 திருப்பூர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.மாவட்டச்செயலாளா் பிரபு செபாஸ்டியன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பா.ஜெயலட்சுமி வரவு - செலவு அறிக்கை வாசித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

கல்வித் துறையில் வட்டார மற்றும் மாவட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், மண்டல ஆய்வுக் கூட்ட குழுக்களின் ஆய்வுகள், மாநில இயக்குநா்கள் ஆய்வு, ஒரே நாளில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் குழு ஆய்வு, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு, வருடாந்திர பள்ளி ஆண்டாய்வு, பள்ளிக் கல்வி அமைச்சா் தலைமையில் குழு ஆய்வு, பள்ளிக் கல்வி துணை மற்றும் இணை இயக்குநா்கள் ஆய்வு, பள்ளிக் கல்வி ஆணையா் ஆய்வு என மாறி மாறி தொடா்ந்து குழு ஆய்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன.

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆய்வுகள் நடைபெறும்போது, ஒவ்வொரு ஆய்வாளரும், ஒவ்வொரு ஆய்வுக்குழுவும் பலவிதமான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கூறி வருவதால், இயல்பான கற்றல் கற்பித்தல் பணிகளும், பள்ளி நடைமுறைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.கடந்த 3 மாதங்களாக வாக்குச்சாவடி அலுவலராக (பிஎல்ஓ) பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஓய்வு இல்லை.வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

இது போன்ற கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியா்களின் குடும்பமும், உடல் நலமும், கற்றல் கற்பித்தலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. கற்பித்தல் பணி சிறக்க பி.எல்.ஓ பணியில் இருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News