உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட பிருத்திவிராஜ்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி போக்சோவில் கைது
- பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
- 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
திருப்பூர் :
தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (வயது 40). இவா், திருப்பூா், கருவம்பா ளையம் பகுதியில் குடும்ப த்துடன் தங்கியிருந்து பின்ன லாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பிருத்திவிராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பிருத்திராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.