உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா
- கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந் தேதி தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது.
- சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கலச அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நேற்று காலை சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.பின்னர் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா கமிட்டியினர் ஆண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிபட்டனர்.