உள்ளூர் செய்திகள்

மார்கெட்டில் பூ வாங்க குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

நாளை மறுநாள் ஆயுதபூஜை, திருப்பூர் மார்கெட்டில் பூ, பழங்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

Published On 2022-10-02 08:26 GMT   |   Update On 2022-10-02 08:26 GMT
  • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
  • இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.

திருப்பூர் :

நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News