திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 7-ம் தேதி அன்னாபிஷேகம்
- தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
- பவுர்ணமி தரிசனத்துக்கு முன்னுரிமையும் வழங்கபடமாட்டாது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற இருப்பதால் வரும் 7-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திகுறிப்பில், "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 7-ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்குஅனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு பிறகு நடை திறக்கப்பட்டு, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
மேலும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பவுர்ணமி நாள் என்பதால், தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், மேற்கண்ட நாட்களில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பவுர்ணமி தரிசனத்துக்கு முன்னுரி மையும் வழங்கபடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.