உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2022-11-01 13:46 IST   |   Update On 2022-11-01 13:46:00 IST
  • கனமழை காரணமாக நடவடிக்கை
  • முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

வேலூர்:

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை செய்யாறு, வெம்பாக்கம் வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

செய்யாறு நகர பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

காலையில் மழையையும் பொருட் படுத்தாமல் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள் விடுமுறை அறிவித்த பிறகு வீடு திரும்பினர்.

நகரப் பகுதிகளில் சில மாணவர்கள் ஆரவாரம் செய்து சென்றதை காண முடிந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. கடும் பனி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

ஓச்சேரி முதல் நாட்றம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையில் வாகனங்கள் விளக்கு போட்டபடி சென்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News