உள்ளூர் செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பயணி கொண்டு வந்த டிராவல் பேக் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தது.இதனை தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் கம்பி வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதேபோன்று மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.இந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.