டெங்கு கொசுக்களை அழிக்க கொசு மருந்துகளை அடிக்க வேண்டும்
- சீர்காழியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற நடைபெற்றது.
- கவுன்சிலர்களுக்கும் ரெயின் கோட் வழங்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, வருவாய் ஆய்வாளர்சா ர்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கணக்கர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,
ரமாமணி (அதிமுக):
எனது வார்டில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
சாமிநாதன் (திமுக): நகராட்சியில் வரி வசூல் முறையாக நடக்கிறதா? எனது வார்டில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
பாலமுருகன் (அதிமுக):
எனது வார்டில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கொசு மருந்து களை அடிக்க வேண்டும்.
சூரியகலா(அதிமுக):
10-வது வார்டில் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
ராமு(திமுக):
மீன் மார்க்கெட் அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ்(அதிமுக):
எனது வார்டில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன சில சமயங்களில் வீடுகளில் புகுந்து உணவை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன இதனால் மக்கள் அவதி ப்படுகின்றனர். உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயந்தி பாபு(சுயே.):
பேசுகையில் எனது வார்டின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வரும் சாலை சேரும், சகதியுமாக இருக்கு இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.
முபாரக் அலி(திமுக):
தேர் வடக்கு வீதி மற்றும் காமராஜர் வீதிகளில்மக்கள் கூட்டம் அதிகளவு சென்று வருவதால் நாள்தோறும் மூன்று முறை கொசு மருந்து, பிளிசிங் பவுடர் தெளிக்க வேண்டும்.
ராஜசேகர்(தேமுதிக):
அனைத்து கவுன்சிலர்களுக்கும் மழைக்காலம் என்பதால் ரெயின் கோட் வழங்க வேண்டும் என்றார்.
நகராட்சிக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் கடைகளுக்கு வரி விதிக்கவேண்டும்.
வேல்முருகன்(பாமக):
எனது வார்டில் மினி மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும்.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் (திமுக):
சீர்காழி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பன்றிகள் அதிக அளவில் பிடிக்கப்பட்டுள்ளன மேலும் தொடர்ந்து பன்றிகள் சுற்றி திரியும் இடங்கள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த பகுதிகளில் விடப்பட்டு வருகிறது.
சீர்காழி நகரில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் எச்சரித்து விடுவிக்க ப்பட்டுள்ளது.
மேலும் சில மாடுகள் கோசாலையில் விடப்பட்டுள்ளன.
நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்ப வர் தொடர்பாக கணக்கெடு க்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
நகராட்சி ஆணையர் ஹேமலதா:
சீர்காழி நகராட்சி யில் வரி செலுத்தாமல் சென்றவர்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மீண்டும் வரி கட்ட தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.