100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு
- இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை.
- நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் 150 -க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம் .
இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் கூலி வேலைக்குச் சென்றால் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் எங்களுக்கு 12 நாட்கள் மட்டுமே 100 நாள் வேலை கொடுத்தனர்.
பின்னர் இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை. நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம். அதனால் கலெக்டர் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.