உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே ஆட்டோவில் புகையிலை கடத்திய வாலிபர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-11-05 14:37 IST   |   Update On 2022-11-05 14:37:00 IST
  • சங்கரன்கோவில் போலீசார் வாகன சோதனை போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்
  • ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன

நெல்லை:

சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்ததில் ஆட்டோ உரிமையாளர் களப்பாகுளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(வயது 25) என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், ரவி, காளிராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News