- தூய காற்று சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்கு செல்லும்போது, நுரையீரலும் பலப்படுகிறது.
- உணவின் வாசனையும், நாக்கின் சுவை அறியும் தன்மையும் பாதிக்கப்படுகிறது.
"திண்டுகல்லுக்கு அருகிலுள்ள தோணி மலை என்றொரு மலைக் கிராமம். வாகனப் புகை இல்லாத, மாசடையாத, தூய காற்று உள்ள இடம்.
அடர்ந்த மரங்கள், கொடிகள், சில உணவுப் பயிர்கள் சூழ எளிமையான வாழ்க்கை வாழும் மலைக் கிராம மக்கள் வசிக்கும் இடம்.
அவ்விடத்தில் தங்கிய சில நாட்களில் உயிர் பச்சை படிந்து விட்டது போன்ற குளிர்ச்சியும், நுரையீரலில் மிருதுத் தன்மையும், நாக்கில் புது ருசியும் உண்டானது...."
என்று, தேசாந்திரி நூலில், எஸ். இராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருப்பார். அது நூறு சதவிகிதம் உண்மை.
இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டிய இரண்டு விஷயங்கள், தூய காற்று சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்கு செல்லும்போது, நுரையீரலும் பலப்படுகிறது. நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படுகிறது என்பதுதான்.
மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது மூக்கு, தொண்டை, நாக்கு என்று நுரையீரல் காற்று அறைகள் வரை சளிப் படலம் படிந்து விடுகின்றன. இதனால், உணவின் வாசனையும், நாக்கின் சுவை அறியும் தன்மையும் பாதிக்கப் படுகிறது.
- வண்டார் குழலி