கதம்பம்

இது என்னங்க..?

Published On 2025-01-16 17:43 IST   |   Update On 2025-01-16 17:43:00 IST
  • தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்.
  • “கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்” என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...

"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா

"இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."

"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல"

தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்...

"கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...

அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது

"இது என்னங்க"

"மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா.

"மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"...

"அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா..

-காத்திக்

Tags:    

Similar News